பிரியா எழுதியவை | மே 24, 2007

கோடை வெயிலிலிருந்து தப்பிக்க…

கொளுத்தும் கோடைவெயில் உச்சந்தலை வழியே பாய்ந்து உள்ளங்கால்வரை பொசுக்குகிறதா? அதிலிருந்து தப்பிக்க இதோ
ஒரு சூப்பர் குறிப்பு:

அரை கிலோ பச்சைப் பயிறுடன் 10 கிராம் துளசி இலை, 5 கிராம் வேப்பிலை, 5 கிராம் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை காயவைத்து பொடியாக்குங்கள்.

இதை தினமும் காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், ஜில்லுன்னு ஒரு நடமாடும் ஏசி, அது நீங்கள்தான்!

(மூலம் – வெப்துனியா)

பிரியா எழுதியவை | மே 24, 2007

கண்களின் வீக்கம் குறைய…

சுட்டெரிக்கும் இந்த அக்னி வெயிலில் சிறிது நேரம் வெளியே சென்றால்போதும், கண்ணில் எரிச்சல் உருவாகி கண்களுக்கு கீழே பைபோன்று வீக்கம் ஏற்படும். அதனை போக்க ஒரு எளிய வைத்தியம்.

கடுகை பொடி செய்து சலிக்கவும். அதை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு குழைத்து, கண்களுக்கு கீழே தடவவும்.

தொடர்ந்து இந்த முறையை பின்பற்றினால் கண் எரிச்சல் குறையும். கண்கள் பளிச்சிடும்.

(மூலம் – வெப்துனியா)

பிரியா எழுதியவை | April 30, 2007

கழுத்து வலியா ???

1. மேஜையில் அமர்ந்து பணி ஆற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.

2. ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும்.

3. படுக்கும்போது கழுத்துக்குக் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்கவும்.

4. வயிறு தரையில் படும்படி குப்புறப்படுக்காதீர்கள். இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.

5. ஒரு குறிப்பிட்ட உயரத்தைப் பார்ப்பதில் தொடர்ச்சியாக, நெடுநேரம் ஈடுபடாதீர்கள். அதே போல் அதிக கனம் தூக்குவதில் அதிக நேரம் ஈடுபடாமல் இருக்கவும்.

6. நெடுநேரம் தொடரும் `டிரைவிங்’கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.

7. கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும்.

8. மனதளவில் இறுக்கமின்றி “ரிலாக்ஸாக” இருக்கவும்.

9. நேரான கோணத்தில் அமரவும். (குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போது, கம்ப்யூட்டர் முன் அமரும் போது…)

10. படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும்.

உடற்பயிற்சிகள்

நாம் பழக்கத்தின் காரணமாகவே நம் கழுத்துக்களை தவறான முறைகளில் திருப்புகிறோம். இதனால் கழுத்துக்கு இடையூறே நம் தசைகள் உறுதியானவையாக இல்லை என்றாலோ நெகிழ்வுத் தன்மை குறைந்தவை என்றாலோ கழுத்துக்கு மேலும் தொந்தரவு வரும்.

கழுத்து உடற்பயிற்சி, கழுத்தின் மீது ஏற்படும் அழுத்தம் சமநிலை இன்மையைச் சீராக்கும். இயக்கத்தை அதிகரிக்கும், கழுத்தைப் பாதுகாக்கிற தசைகளை உறுதி பெறச் செய்யும்.

எனினும் கழுத்துப் பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்யவும்.

(மூலம் – வெப்துனியா)

Yahoo Tamil

பிரியா எழுதியவை | April 27, 2007

வாய்ப்புண் வருவதை தவிர்க்க

அடிக்கடி வாய்ப்புண் வருவதற்கு வைட்டமின் சத்துக்குறைவு, ரத்தசோகை இரண்டும் முக்கிய காரணம். இவை தவிர வைரஸ் தொற்று, மலச்சிக்கல் ஆகியவற்றாலும் வாய்ப்புண் வருவதற்கு வாய்ப்புண்டு.

கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துகொண்டால் வாய்ப்புண் வருவது குறையும். தினமும் பால், பழம் மற்றும் கீரை ஆகியவற்றை சாப்பாட்டில் சேர்த்து கொள்வது நல்லது.

இரவில் தினந்தோறும் 2 வாழைப்பழங்கள் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். வாயை எப்போதும் சுத்தமாக வைத்து கொண்டால் வைரஸ் தொற்றுக்கு இடமிருக்காது.

(மூலம் – வெப்துனியா)

பிரியா எழுதியவை | April 27, 2007

அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்

தேன் என்று சொன்னாலே நாவெல்லாம் தித்திக்கும். தேனால் நம் சருமம் அடைகிற நன்மைகளைச் சொன்னால் மனசெல்லாம் பூரிக்கும். தேன் தரும் அற்புத நனமைகளை சற்று தெரிந்து கொள்வோம்.

தோல் தொய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டதே என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது.

இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும். அதனுடன், ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் பால், கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சோப்புத் துண்டுகளை போடவும். ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள்.

வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கும். மேலும், சோப்பு உடலை சுத்தமாக்கும், எண்ணெய்கள் தோலை இறுக வைக்கும். மேனி மிளிரும்.

தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இதன்படி செய்தாலே போதுமானது உங்கள் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

(மூலம் – வெப்துனியா)

« புதிய இடுகைகள் - பழைய பதிவுகள் »

வகைகள்